இந்திய சுதேச சமஸ்தானங்கள் என்று சொல்லப்படும் மைசூர், பரோடா, காஷ்மீர், திருவனந்தபுரம் முதலிய சமஸ்தானங்கள் பிரிட்டிஷ் இந்திய ராஜ்யத்தைவிட, பிரிட்டிஷ் இந்தியாவில் உள்ள சீர்திருத்தக்காரர்களைவிட இந்தக் கொடுமைகளை ஒழிக்க ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொன்றுமாக முன்வந்திருக்கின்றது என்பதாகும். காஷ்மீர் சமஸ்தானத்தில் எந்த விஷயத்திலும் தீண்டாமையைப் பாவிக்கக் கூடாதென்றும், தீண்டப்படாதார் என்னும் வகுப்பாருக்கு மற்றவர்களைப்போல் சகல உரிமைகளும் அளிக்கப்பட்டிருப்பதோடு, கல்வி விஷயத்தில் அவர்களுக்குச் சாப்பாடு போட்டும் இலவசமாய்க் கற்றுக் கொடுக்கவேண்டும் என்றும் தீர்மானமாயிருக்கும் விஷயம் முன்பே தெரிவித்திருக்கிறோம்.
...more

