தலைவி என்ற பதத்திற்கும், நாயகி என்ற பதத்திற்கும் மனைவி என்று பொருள் குறிக்கப்பட்டிருப்பதாலும், அது அன்பு கொண்ட நிலையில் மாத்திரம் ஆணையும், பெண்ணையும் குறிக்கின்றதேயொழிய, வாழ்க்கையில் கட்டுப்பட்ட பெண்களுக்குத் தலைவி என்கின்ற வார்த்தை, அதன் உண்மைக் கருத்துடன் வழங்கப்படுவதில்லை. நாயகன் - நாயகி என்கின்ற சமத்துவமுள்ள பதங்களும், கதைகளிலும், புராணங்களிலும் ஆண் - பெண் இச்சைகளை உணர்த்தும் நிலைகளுக்கே மிகுதியும் வழங்கப்படுகின்றன. ஆகவே, காமத்தையும், அன்பையும் குறிக்குங் காலங்களில் சமத்துவப் பொருள் கொண்ட நாயகர் - நாயகி, தலைவர் - தலைவி என்ற வார்த்தைகளை உபயோகித்துவிட்டு, கற்பு என்ற நிலைக்கு வரும்போது அதைப்
...more

