பொய் சொல்லக்கூடாது என்று வாயால் சொல்லி விடுகின்றோம். பொய்ச் சொல்லுவதையும், ஒழுக்கக் குறைவென்று சொல்லிவிடுகின்றோம். ஆனால், தொழிற்முறைக்காகப் பொய்யை அவசியமாக வைத்து, அதனால் பிறருக்குக் கஷ்டத்தையும், நஷ்டத்தையும் கொடுத்து வரும் வக்கீல்களையும், வியாபாரிகளையும் மனித சமூகத்தில் எவ்வித இழிவுமின்றி ஏற்றுக் கொண்டிருக்கின்றோம். அத்தொழிலில் சம்பாதித்த செல்வத்தைக் கொண்டும், பெருமையைக் கொண்டும் அம்மக்களைக் கவுரவமாகவே மதிக்கின்றோம். ஆனால், அதுபோலவே, நடக்கும் மற்றொரு தொழிற்காரரை உதாரணமாக, தேவதாசிகள் போன்றவர்களை இழிவாகக் கருதுகின்றோம். பொதுவாக, இம்மூன்று பேர்களாலும் மனித சமூகங்களுக்குக் கெடுதியும், நஷ்டமும்
...more

