பெண்களை எந்தச் சமயத்திலும் சுதந்திரமாய் இருக்கவிடக் கூடாது என்றும், குழந்தைப் பருவத்தில் தகப்பனுக்குக் கீழும், வயோதிகப் பருவத்தில் (தாம் பெற்ற) பிள்ளைகளுக்குக் கீழும் பெண்கள் கட்டுப்படுத்தப்படவேண்டும் என்றும் சொல்லுகிறது. ‘‘பெண்கள், ஆண்களும் - மறைவான இடமும் - இருளும் இல்லாவிட்டால் தான் பதிவிரதைகளாக இருக்க முடியும்’’ என்று அருந்ததியும், துரோபதையும் சொல்லி, தெய்வீகத்தன்மையில் மெய்ப்பித்துக் காட்டிய தாகவும் இந்துமத சாஸ்திரங்களும், புராணங்களும் சொல்லுகின்றன.

