தாங்கள் அனைவரும் நினைத்தால் வருணைப் பதவியிலிருந்து இறக்க முடியும் என்று அவர்களுக்குத் தெரியும். ஆனால் பூனைக்கு யார் மணி கட்டுவது. பல ஆண்டு காலமாக தலைவர் சொன்னதை அப்படியே கேட்டு தலையாட்டி வந்த கூட்டம் அது. திடீரென்று தலைமைக்கு எதிராக திரளமாட்டார்கள். தெரியாது. அதிலும் தெய்வத் தலைவரின் மகனுக்கு எதிராக செயல்பட அவர்களது அடிமை டிஎன்ஏ அனுமதிக்காது.