சாலைகளில் கூடியிருந்த மக்கள்தான் அவனுக்கு ஒரு புதிராக இருந்தார்கள். அவனால் கடுமையாக வெறுக்கப்படும் அவனுடைய தந்தை கோடிக்கணக்கானவர்களால் நேசிக்கப்படுகிறார் என்பது அவனுக்கு வினோதமாக இருந்தது. இதனால் அவர்கள் அடைந்த பயன் என்னவென்று யோசித்தால் எதுவுமில்லை. கட்சியைச் சேர்ந்த ஒரு பெண்மணி அவன் கைகளைப் பற்றிக் கொண்டு கதறினாள். இந்த நாடே அந்தக் கைகளில் இருப்பதாகக் கூறி கண்களில் ஒற்றிக் கொண்டு அழுதாள். அவள் கண்ணீரால் ஈரமான விரல்களை நீண்ட நேரம் துடைக்காமல் பார்த்தபடி அமர்ந்திருந்தான் வருண். எப்படி இவர்களால் தங்கள் நம்பிக்கையை ஒரு முன்பின் அறிமுகமில்லாத மனிதனின் மீது அவ்வளவு எளிதாக இறக்கி வைக்க முடிகிறது?
...more