வருண் ஒரு சுதந்திரமான ஆத்மா. அவனுக்குக் கட்டுப்பாடுகள் இல்லை. எவ்வளவு திறமையான ப்ரோகிராமர். அவன் தந்தை அவனை ஒரு சாதாரண முதல் மந்திரியாக்கிவிட்டார் என்ற தகவல் வந்தபோது மிகவும் வருந்தினான் வாங். ஒரு மாஸ்டர் ப்ரோக்ராமருக்கு அதைவிட வாழ்க்கையில் பெரிய தண்டனை என்ன இருந்துவிடப் போகிறது?