ஆனால் இன்னும் கல்லூரிக்குக் கட் அடித்துவிட்டு சினிமாவுக்குப் போகும் ரவுடி மாணவன் மாதிரிதான் இருந்தான். மீசையும் தாடியும் இந்த ஐந்து நாட்களில் வளர்ந்திருந்தன. தலை வாரப்படாமல் காமா சோமாவென்று கிடந்தது. காலில் ஒரு ரப்பர் செருப்பு. ஒரு முதலமைச்சர் இப்படியா இருப்பார்.