ராமசாமி பெரிய அரசியல் புள்ளி அல்ல. அவர் அரசாங்கத்தின் எந்தப் பதவியிலும் இல்லை. அவருக்கு இருந்த ஒரே தகுதி அவர் முன்னாள் முதலமைச்சரின் ஒன்று விட்ட மச்சான் என்பதுதான். இப்போதைய முதலமைச்சர் வருணின் மாமா. கவுசல்யாவின் சித்தப்பா மகன். இதற்கு முன்பாக ஊரில் புண்ணாக்கு மண்டி வைத்திருந்தவருக்கு இப்போது நாற்பத்தெட்டு வயதில் சொந்தமாக மூன்று மது தயாரிக்கும் தொழிற்சாலைகள் இருந்தன. ஒரு சிமெண்ட் கம்பெனியில் பெரும்பான்மை பங்குகளை வைத்திருந்தார். ஒரு கபாடி லீக் அணியையும் ஹாக்கி லீக் அணியையும் வைத்திருந்தார். ஆண்டுக்கு ஒருமுறை பாங்காக், மக்காவ், லாஸ் வேகாஸ் என்று பறந்து பல முக்கியமான ‘தொழில்’ முறை சந்திப்புகளை
...more