வருடத்தின் குறிப்பிட்ட சில தினங்களில் மகேந்திரன் குடிக்க ஆரம்பித்துவிடுவார். அவள் அம்மா இறந்த தினம் அதில் ஒன்று. வேறு சில தினங்களிலும் குடிப்பார். ஆனால் எதற்காக என்று அவரும் சொன்னதில்லை, இவளும் கேட்டதில்லை. அது தவிர எப்போதும் அவர் குடித்து இவள் பார்த்ததில்லை. யாருடனும் சேர்ந்து குடித்ததில்லை. தனியாகத்தான்.