இத்தனைக்கும் இந்த ஊழல் விவகாரம் அவர் நினைவிலேயே இல்லை. வெறும் ஐந்து கோடி ரூபாய். ஆட்சியில் இருந்த பன்னிரண்டு வருடங்களில் எவ்வளவு சம்பாதித்திருப்பார் என்று அவருக்கே தெரியாது. அசையும் அசையாத சொத்துகள், ரொக்கம், பத்திரங்கள், முதலீடுகள், வெளி நாடுகளில் நிழல் நிறுவனங்கள் என்று இருபதாயிரம் கோடியைத் தாண்டும். இது