அவருக்குப் பின்னால் ஒரு காதல் இருப்பது அவளுக்குத் தெரியும். அது தன் அம்மா மட்டுமல்ல என்பதுவும் அவளுக்குத் தெரியும். காதலைப் பற்றி பிரியமானவர்களிடம் பேச யாருக்குத்தான் பிடிக்காது. அதிலும் நிறைவேறாத காதல்கள் பேசுவதற்காகவே மனதின் ஒரு மூலையில் வருடக்கணக்கில் காத்திருக்கும்.