குமரேசனை ஒரு சுற்று காய்ச்சி எடுத்தார் வினோதன். அத்தனை கெட்ட வார்த்தைகளையும் அமைதியாக வாங்கிக் கொண்டிருந்தார் குமரேசன். குறுக்கே பேசினால் இன்னும் அதிகமாக வசவு கிடைக்கும். சில நேரங்களில் அறை கூடக் கிடைக்கும். கோடிகளில் சம்பாதிக்க இதையெல்லாம் தாங்கிக் கொண்டுதான் ஆகவேண்டும்.