“உங்க அப்பா எல்லாம் சாதாரண உள்ளூர் தாதா. சத்யானந்தாவும் ராபர்ட்டும்தான் இதுல மாஸ்டர்ஸ். எப்படியோ உங்க அப்பாவைத் தீர்த்துட்டு உங்க குடும்பத்தையும் தீத்துட்டா ஆஃப் ஷோர் அக்கவுண்ட்ல இருந்த அத்தனையும் சுருட்டிக்கலாம்னு திட்டம் போட்டிருக்காங்க. உங்க அப்பாவை மட்டுமில்லை இந்த மாதிரி ஒரு சிலரை ஏற்கனவே இப்படி செஞ்சிருக்காங்க. இதுக்காக அவங்க ஒரு உலக அளவில் இயங்கும் தொழில்முறை இயக்கத்தில் இருந்து ப்ரொபஷனல் கொலைகாரங்களை எங்கேஜ் பண்றாங்க. அதுக்கு சுருக்கமா ஏஜன்சின்னு பேரு.