மகேந்திரன், வாங் மற்றும் குழுவினர் நான்கு நாட்களாக அடைந்து கிடந்த அந்தப் பெரிய ஆடம்பர சூட்டை விட்டு வெளியே வந்தார்கள். எம்எல்ஏக்கள் ஏற்கனவே கிளம்பிப் போயிருந்ததால் கடலோரம் இருந்த அந்த ரெயின்போ பீச் ரிசார்ட்டில் கடந்த மூன்று நாட்கள் அளவுக்கு பெரிய சத்தம் எதுவும் இல்லை.