இடுப்பில் துப்பாக்கியுடன் ஒரு ஆறடி மனிதன் பவ்யமாக குனிந்து திட்டுகளை வாங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தான் வருண். அந்த ஹால் முழுக்க அப்படியான கூன் முதுகு மனிதர்களால் நிரம்பியிருந்தது. கோபத்தில் துப்பாக்கியை உருவி சுட்டுவிட்டால் என்ன ஆகும் என்று தோன்றியது. அந்தக் காவலர் துப்பாக்கி வைத்திருக்க மட்டுமே அதிகாரம் படைத்தவர். அதை சுடும் அதிகாரம் அவரிடம் இல்லை. அங்கே அதிகாரம்தான் ஆயுதம்.