முன் சீட்டில் ஒரு கறுப்பு உடைப் பாதுகாவலர் துப்பாக்கியுடன். அவர் ராணா ரந்தீர். பீகாரைச் சேர்ந்தவர். வருணின் பாதுகாப்புக்கு எப்போதும் அவர்தான் வருவார். தமிழ் அரைகுறையாகத்தான் தெரியும். எதுவும் பேசமாட்டார். ஏதாவது வாங்கித்தந்தாலும் சாப்பிட மாட்டார். தன்னை நோக்கி ஒரு தோட்டா வந்தால் குறுக்கே பாய்ந்து மார்பைக் கொடுக்க ஒரு வினாடி கூட தயங்க மாட்டார் என்று வருண் உறுதியாக நம்பினான். அவரை நம்பி ஒரு குடும்பம் வேறு இருக்கிறது. வருண் பல முறை அவர் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு நண்பர்களுடன் ஓடிவிடுவான். நேற்று இரவைப் போல. அதற்கு அவருக்குத் திட்டு வேறு கிடைக்கும்.