“சோமசுந்தரம்னு என் பிரெண்டு இருந்தான். ஷிப்பிங்ல வேலை பாத்தான். வருஷத்துல ஆறு மாசம் கடலில் இருப்பான். கடைசி வரைக்கும் நீச்சல் கத்துக்கலை. ஏன்னு கேட்டேன். நடுக் கடலில் கப்பல் மூழ்கும் போது நீச்சல் தெரிந்து எந்தப் பிரயோசனமும் இல்லை என்பான். நீச்சல் தெரியாதவன் சீக்கிரம் செத்துருவான், நீச்சல் தெரிஞ்சவன் கொஞ்ச நேரம் போராடி சாவான், அதிலும் லைப் ஜாக்கெட் போட்டு மிதக்கறவன் பசியில துடிதுடிச்சு மெல்ல மெல்ல சாவான்னு சொல்லுவான்.