வட்டியும் முதலும் (Vattiyum Muthalum)
Rate it:
20%
Flag icon
இந்த மழைக் காலத்தில் யார் யாரோ வைத்த எத்தனையோ செடிகள் வளரும் என்கிற நம்பிக்கைதான் இன்னொரு கோடையைக் கொண்டுவருகிறது. செடிகள் என்பது செடிகள் மட்டுமே அல்ல!
20%
Flag icon
வெள்ளை நிழலாக, குழந்தை இயேசு-வின் புன்னகையாக, கைப்பிடி ஈர மண்ணாக என்னோடு எப்போதும் இருக்கிறது ரோஸி சிஸ்டரின் நினைவு.
21%
Flag icon
இறங்கும் மலை உச்சியில், மேய்ப்பனுக்காகக் காத்திருக்கும் வழி தவறிய ஆட்டுக்குட்டியைப் போல நாம் வாழ்க்கை முழுக்க நம் மனதுக்குப் பிடித்த டீச்சருக்காகக் காத்திருக்கிறோம்.
23%
Flag icon
எனக்குத் தெரிந்து, இல்லாதப்பட்டவர்கள்தான் சிரிக்கிறார்கள். காமெடியை அனுபவிக்கிறார்கள்.
23%
Flag icon
கள்ளம் கற்றது ஓர் இரவு காமம் கற்றது ஓர் இரவு ஜனனம் கற்றது ஓர் இரவு நான் மரணம் கற்றதும் ஓர் இரவு கோடி இரவுகள் கற்றபோதும் இந்த இரவு கேட்கப்போகும் எந்தக் கேள்விக்கும் எனக்கு விடை தெரியாது’
26%
Flag icon
‘தோழமை’ என்ற வார்த்தையை சட்டென்று யாராலும் கொச்சைப்படுத்த முடிகிறது.
29%
Flag icon
விளையாடுவதை நாம் நிறுத்தும்போது, நம்மை வைத்து இந்த உலகம் விளையாட ஆரம்பிக்கிறது!
34%
Flag icon
இலை தழைகளை உடுத்திக்கொண்டு (ஆதாம் - ஏவாள்தான்) இருவர், ஏ.டி.எம். மெஷினில் பணம் எடுக்க முயற்சி செய்கிறார்கள். ஒரு கும்பலே அவர்களை நெருக்கி இழுத்து வெளியே தள்ளுகிறார்கள்.
40%
Flag icon
அசையும் மரங்களை உணரும் கண்கள், காற்றை அறியாதது மாதிரி... எல்லோரையும் எழுதிவிட்டு, காற்றைப்போல வாழ்பவர்கள்தான் பல நிருபர்கள்!
41%
Flag icon
யாரும் அறியாத் தனிமைகளில், இதயத்தில் இருந்து மெல்லிய குரலில் அக்காக்கள் பாடுவதைக் கேட்டு இருக்கிறீர்களா? அது... ஏக்கமும் பிரியமும் ததும்பும் எல்லை இல்லாத ஆத்மார்த்தம்.
45%
Flag icon
கொஞ்சம் அப்பாவித்தனம், ரசனை, அழகியல், மனம் வெறுமையாகக் கிடக்கிற சுகம், அடுத்த கணம் பற்றி அறியாத சுவாரஸ்யம் இதெல்லாம் வேண்டும் இல்லையா?