‘கடலோரக் கவிதைகள்’ படத்தை இதுவரை அம்பது, அறுபது தடவை பார்த்-திருப்பேன். ஒரே காரணம், ஜெனிஃபர் டீச்சர். பாதி நிழலும் பாதி வெயிலுமாய் ஓர் ஒளி விழுந்திருக்க, சர்ச்சுக்கு வெளியே நின்று, ‘டீச்சர்... டீச்சர்... எனக்காக கடவுள்ட்ட பிரார்த்தனை பண்ணுவீங்களா டீச்சர்’ என சின்னப்பதாஸ் கெஞ்சுவது மாதிரிதான் நாமும். நமக்கான பிரார்த்-தனைகள் எப்போதும் அவர்களிடம்தான் இருக்கின்றன.