ஒரு காலத்தில், நாம் துயரங்களோடு கடந்துவந்த ஃபீலிங்குகள் எல்லாமே ஒரு கட்டத்தில் காமெடியாகிவிடுகின்றன. காதலிக்காக கையைக் கிழித்துக்கொண்டது, தூக்க மாத்திரை தின்றது, நண்பனுக்காகச் சண்டை போட்டது, உறவுகளிடம் மல்லுக்கு நின்றது, அலுவலகத்தில் கொந்தளித்தது, எவனுக்கோ சூனியம் வைத்தது, பழிவாங்கத் துடித்தது... எல்லாமே காலத்தால் காமெடியாகி நம்மைப் பார்த்துச் சிரிக்கின்றன!