உண்மைதான். இந்த உலகத்தின் ஒவ்வோர் அணுவிலும் போதை இருக்கிறது. ஒற்றைக் கோவணத்தோடு கரடு முரடான மலைப் பாதையில் அடிவானம் நோக்கி ரமணர் நடக்கிற ஒரு புகைப்படத்தில் மகத்தான போதை நிரம்பி வழிகிறது. பல ஆண்டுகள் அதிகார வெறியர்களின் வீட்டுக் காவலில் இருந்து வெளியே வந்து மக்களுக்குக் கை காட்டும் ஆங் சான் சூகியின் கண்களில் பெருகித் ததும்புகிறது உரிமைக்கான போதை.