தொடர்ந்து பொருள்வயிற் வாழ்வுக்கும் அதிகாரத்துக்கும் எதிரான மனநிலையிலேயே வாழும் ஜீவன் நான். அப்படியான உலகத்தில் ஒட்டாமல் எளிய மனசுகளை நோக்கியே ஓடிக்கொண்டு இருக்கிறது என் மனம். அதுதான் உண்மையான சந்தோஷமாக இருக்கிறது. எழுதுவதும், பேசுவதும், சினிமா எடுப்பதும் அந்த சந்தோஷத்துக்காக மட்டுமேதான். சக மானுடர்களின் அன்பும் அரசியலும்தான் எனது ஜீவனம்... இலக்கியம்... திரைப்படம்... எல்லாமே.