அவளது அப்பா, 40 வருஷமாக ஒரே தனியார் கம்பெனியில் வேலை பார்த்து ரிட்டையர்ட் ஆனவர். இவ்வளவுக்கும் ரிட்டையர்ட் ஆவதற்கு ஐந்து வருடங்களுக்கு முன்புதான் அவர் சீனியர் மேனேஜர் ஆனார். அவர் பேசும்போது அடிக்கடி, ‘‘இத்தனை வருஷத்துல மொதலாளிக்கு விசுவாசமா இருந்திருக்கேன். அந்தத் திருப்தி போதும் எனக்கு...’’ என்பார். அவரது மகள் பேக்கேஜ் பேசி, நாலு வருடங்களில் மூணு கம்பெனி மாறிவிட்டாள். முதலாளி, கம்பெனி விசுவாசத்துக்கெல்லாம் கிட்டத்தட்ட போட்டோ மாட்டி மாலை போட்டாகிவிட்டது.