More on this book
Community
Kindle Notes & Highlights
விளையாடுவதை நாம் நிறுத்தும்போது, நம்மை வைத்து இந்த உலகம் விளையாட ஆரம்பிக்கிறது!
விடியலில் தெருமுனைக் குப்பைத் தொட்டியில் காலி மது பாட்டில்கள் பொறுக்க வரும் தலை கலைந்த சிறுமிதான் தொடங்கிவைப்பாளா இந்தப் புத்தாண்டையும்?
அந்த மண்ணில் இருந்து இன்னும் ஆயிரமாயிரம் பேர் விவசாயத்தைக் கட்டி மாரடிக்க முடியாமல், நிலங்களை விட்டுவிட்டு, திருப்பூர் பனியன் கம்பெனிகளிலும் அரபு நாடுகளின் கொடும் வேலைகளிலும்
வேலை என்பது, விருப்பம் சார்ந்த விஷயம்!
அவளது அப்பா, 40 வருஷமாக ஒரே தனியார் கம்பெனியில் வேலை பார்த்து ரிட்டையர்ட் ஆனவர். இவ்வளவுக்கும் ரிட்டையர்ட் ஆவதற்கு ஐந்து வருடங்களுக்கு முன்புதான் அவர் சீனியர் மேனேஜர் ஆனார். அவர் பேசும்போது அடிக்கடி, ‘‘இத்தனை வருஷத்துல மொதலாளிக்கு விசுவாசமா இருந்திருக்கேன். அந்தத் திருப்தி போதும் எனக்கு...’’ என்பார். அவரது மகள் பேக்கேஜ் பேசி, நாலு வருடங்களில் மூணு கம்பெனி மாறிவிட்டாள். முதலாளி, கம்பெனி விசுவாசத்துக்கெல்லாம் கிட்டத்தட்ட போட்டோ மாட்டி மாலை போட்டாகிவிட்டது.
கண்காணாத நாடுகளில் வேலையின் பொருட்டு துயரம் சுமப்பவர்கள் எத்தனை பேர்? வெளிநாட்டு வேலையையே கனவாக வைத்துக்கொண்டு தவிப்பவர்கள் எத்தனை பேர்?
‘‘ஏய்ய்ய்... ட்ரம்மைத் தள்ரா... தள்ரா...’’ எனக் கத்தியபடியே கரி வண்டியை உருட்டிக்கொண்டு ஷேக் தாவூதோடு ஓடிவந்த எனக்கு எதிரே அவள் வந்து நின்ற கணமே, அந்தக் காதலுக்கு ‘எ ஃபிலிம் பை பஷீர்’ என கார்டு விழுந்தது!
இயலாமை ஒரு கரையிலும் அன்பு மறு கரையிலுமாக ஓடிக்கொண்டே இருக்கிறது காதல் நதி.
அப்புறம்... சென்ட்ரல் பக்கம் பிளாட்ஃபாரத்தில் வசிக்கும் ஒரு சிறுமியைப் பற்றி எழுதியிருந்த மறு வாரம், அவள் படிப்பதற்காக விகடன் மூலமாக நிதி கிடைத்தது. ‘‘அண்ணே, இப்போ நான் படிக்கிறேன்ணே... ரொம்பத் தேங்ஸுண்ணே!’’ என அவள் கண்கள் மலர்ந்து எதிரே நின்ற ஒரு கணம்... அற்புதம்!
நமக்கு எல்லாமே இளையராஜாதான்! அலைகடலும் அவரே ஆழ்கடலும் அவரே என்றான பின், கரைகளும் நுரைகளும் என்னவாகும்?
‘‘நீயும் பணம் அனுப்புவ... ஒரு பொடவ எடுத்துத் தருவனு பாத்தேன். கோடித் துணிதான் கொண்டுவருவ போலயிருக்கு...’’,
வீட்டுச் சாப்பாடுக்கு கூட்டம் கும்மும்!
‘‘ஏண்டா... கரன்ட்டே இல்ல எப்பிடிறா பார்த்தீங்க?’’ என்றால், லேப்டாப்பைக் காட்டுகிறார்கள்.
இன்னமும் இருக்கிறார்கள்!
வீட்டில் எங்கே ஷாட் வைத்தாலும் ஃப்ரேமில் ஏதோ ஒரு மூலையில் அந்தப் பூனை இருக்கும்.
அவனைப் பார்த்தால், ‘இப்படி ஒரு மனசு நமக்கு இல்லையே’ என ஆச்சர்யமாக இருக்கும்!
இல்லாமல் போய்விடுகிறவர்கள் எங்கேயும் இருக்கிறார்கள் என்பதை நான் உணர்ந்த தருணங்கள் அவை.
இப்போதெல்லாம் அடிக்கடி எனது பேச்சிலும் நடவடிக்கைகளிலும் என் அப்பாவின் சாயலை என்னிடமே நான் உணர்கிறேன். அது சமயங்களில் சந்தோஷத்தையும் சமயங்களில் துயரத்தையும் தருகிறது.
இலக்குகள், லட்சியவாதங்கள், அரசியல், பண வேட்கை... எதுவும் இல்லாத எளியவர்களின் வாழ்க்கை எவ்வளவு சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் இருக்கிறது!
ரெங்கநாதன் தெருவில் ஆயிரம் ரெண்டாயிரத்துக்கு பார்த்துப் பார்த்து பர்ச்சேஸ் செய்துவிட்டு, வியர்வை வழிய வழிய ரோட்டுக் கடையில் கட்டைப் பைகளோடு நின்று குடும்பமாக கோன் ஐஸ்க்ரீம் சாப்பிடுபவர்களின் முகங்களில் எவ்வளவு சந்தோஷம் வழிகிறது.
சில உணர்வுகளை ஆயுசுக்கும் சொல்லிவிட முடியுமா என்றும் தோன்றுகிறது. கழுத்து மடிப்பெல்லாம் வேர்வையாய் ஈரம் பிசு பிசுக்க கையில் ஆரஞ்சு மிட்டாயை மடித்து நீட்டிய பால்ய தோழியின் வாசத்தை எப்படிச் சொல்ல..?
‘சற்று முன் இறந்தவனின் சட்டைப் பையில் செல்போன் ஒலித்துக்கொண்டே இருக்கிறது கையில் எடுத்த காவலர் ‘சார், யாரோ அம்முனு பேசுறாங்க’ என்கிறார். ஒரு நொடி இறந்தவனின் கண்கள் திறந்து மூடுகின்றன!’
‘ஓ வசந்த ராஜா... தேன் சுமந்த ரோஜா...’ இப்போது பார்த்து இளையராஜா ஹிட்ஸ் போடுகிறவன் எவ்வளவு அற்புதன்?
மழைக் காலத்தின் உணவைக் கோடையில் சுமந்து திரியும் எறும்பைப் போல, கோடையிலும் இந்த மழையையும் நினைவுகளையும் சுமந்து திரிகிறோம் நண்பர்களே.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான மழை.
உலகம் முழுவதும் எத்தனை எத்தனை பேர் இப்படி யாரோ ஒருவரின், ஒரு நிறுவனத்தின், ஒரு தேசத்தின் அதிகார வேட்கைக்குத் துன்பப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.
பரவச ஆட்டத்தில் (ஆ)சாமிகள்!
பயணங்களில் யாரோ நீட்டுகிற ஒரு வாட்டர் பாட்டில், புளியோதரைப் பொட்டலம், பாதி சிகரெட், ஒரு புன்னகை, விசாரிப்பு, சினேகம், காதல்... எல்லாவற்றுக்குமே ஒரு காவியத்தன்மை வந்துவிடுகிறது.
கரிசல் அறுந்து சடாரெனச் செம்மண் விரியும் ஒரு புள்ளி,
‘‘கெட்ட பழக்கங்கள் நல்ல பாம்பைப்போல... பட்டெனத் தூக்கி வீசிவிடு’’ என்கிறார் பரமஹம்சர்.
அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கும் அடுத்து நாம் செய்வதற்கும் எத்தனை எத்தனை அற்புதங்கள் இருக்கின்றன? எழுத்து, வாசிப்பு, இசை, சினிமா, நல்ல உரையாடல்கள், பயணங்கள், வேலை, உணவு, யோகா, உடற்பயிற்சி என எவ்வளவோ விஷயங்கள்... அத்தனையும் போதைதான் என்பதை இப்போது உணர்கிறேன்!
உங்கள் அம்மாஅப்பாவின் கல்யாண போட்டோவைப் பார்த்து இருக்கிறீர்களா? அதில் இருக்கும் அம்மாவின் முகம் இப்போதும் அம்மாவிடம் இருக்கிறதா?