More on this book
Community
Kindle Notes & Highlights
தன் மக்களை எந்தக் கணத்திலும் எதிரியாகவும் விரோதியாகவும் துரோகியாவும் ஆக்கிவிடும் வல்லமை படைத்தது ராசாங்கம்.
வாயிருப்பது மூடிக்கொள்ளத்தான். கையிருப்பது கும்பிடு போடத்தான். காலிருப்பது மண்டியிடத்தான். முதுகிருப்பது குனியத்தான். உடலிருப்பது ஒடுங்கத்தான்.
'இன்னைக்கு இருக்கற நெலம நாளைக்கும் இருக்குமா? கஞ்சிக்கில்லாத அலயறப்ப ஒருத்தர ஒருத்தரு அடிச்சிக்கிட்டுச் சாவக் கூடாது பாரு. இப்பருந்தே வரிசைக்குப் பழகிக்கிட்டா அப்பப் பிரச்சின வராதில்ல.'
இருக்கறவனுக்கு எப்பக் கஷ்டம் வந்துச்சு. இல்லாத இந்தக் கூமுட்டைகதான் இப்படி வந்து நின்னு சாகறம்.'
'பேசற வாயும் திங்கற வாயும் ஒன்னுதான். ஆனாலும் எல்லாத்தயும் பேசீர முடியுமா? இல்ல, எல்லாத்தயும் தின்னர முடியுமா?' என்றாள் கிழவி.
'சனம் எல்லாத்தயும் அழிச்சு அழிச்சுக் கையில வழிச்சு வழிச்சு வாயில போட்டுக்குது. அப்பறம் சனத்தத் தவிர வேறெது இங்க வாழ முடியும்? கடசியாச் சனமுந்தான் வாழ முடியுமா?' என்று அக்கிழவி பெருமூச்சு விட்டாள்.
'இதிலென்னாயா இருக்குது? சாமிக்கு வேண்டி வெட்டித் திங்கறமே. அப்பிடி நெனச்சுக்க' என்றார்கள். 'சாமி உசுர உறிஞ்சிக்கிட்டுச் சக்கய நமக்குத் தருவாரு. இதுல ஒவ்வொரு சதையிலயும் உசுரோடிக்கிட்டு இருக்குமே. எப்பிடியாயா திங்க நாக்கும் மனசும் வரும்?' என்று கேட்டாள் கிழவி. அது சரிதான் என்று ஆமோதித்தார்கள்.
இப்பத்தான் குசுவுட்டாக்கூட ராசாங்கத்துல பதிஞ்சரோணும்' என்றாள் ஒருத்தி. 'ஒருநாளைக்கி ரண்டு தடவதான் குசுவுடலாம்னுகூடச் சட்டம் வரும்' என்றாள் இன்னொருத்தி.
கடசியா ஒரு கேள்வி. இது மூலமா நீங்க என்ன சொல்ல விரும்பறீங்க?' 'என்ன சொல்ல விரும்பனும்?' 'இது மாதிரி ஏழு குட்டி போடற வெள்ளாடுவள நாங்க வளக்கறம். இதே மாதிரி எல்லாரும் வெள்ளாடு வளக்கனும், அப்பத்தான் நாடு சீக்கிரமா முன்னேறிப் பேரரசாவும்.அதனால வெள்ளாடு வளக்கச் சொல்லிக் கேட்டுக்கறீங்கன்னு சொல்லீரலாமா?' 'செரி, அப்படியே சொல்லீரலாம்.'
சாதாரணர்களிடம் அதிசயம் எதற்கு? அதைக் கட்டிக் காப்பாற்றுவதும் போற்றுவதும் அவர்களால் ஆகக்கூடியதல்ல. அதிசயத்தைப் பார்க்கலாம். கேட்கலாம். சொல்லி மகிழலாம். உடன் வைத்துப் பராமரிக்க இயலாது.
புறம் கண்டே அதிசயம் என்கிறார்கள். அகம் கண்டு அதிசயம் சொல்வது அத்தனை சுலபமா?