Kindle Notes & Highlights
கடவுளைத் தன் குழந்தையாயும் தன்னை அன்னையாகவும் பாவித்துப் பாடப்படும் இந்தப் பாடல் வகையின் ஆரம்பங்கள் திவ்யப் பிரபந்தத்தில் பெரியாழ்வாரின் திருவாய்மொழியில் இருந்துதான் தொடங்கியிருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். பெரியாழ்வாரின் காலத்துக்குப் பின் பிள்ளைத் தமிழ் நூல்கள் இதுவரை 150 கிடைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், பெரியாழ்வாரின் பிள்ளைத்தமிழ்ப் பாடல்கள் ரொம்ப ரொம்ப ஸ்பெஷல். படித்தால், நம் வீட்டில் விஷமம் செய்யும் ஒரு குழந்தையைப் பக்கத்தில் இருந்து பார்த்து, சுடச்சுட இப்போது எழுதிய பாடல் மாதிரி, கால எல்லைகளைத் தாண்டி அவரின் பாடல்கள் நிற்கும்.