More on this book
Community
Kindle Notes & Highlights
Read between
November 10 - November 11, 2021
ஒவ்வொரு வயதிலும் வெவ்வேறு தோற்றம் காட்டும் கண்ணாடிதானோ வாழ்க்கை!
‘அம்மா என்றால் ஓர் அம்மாதான். உன் அம்மா, என் அம்மா, என தனித் தனி அம்மாக்கள் கிடையாது. ஒரே அம்மா!’ - லா.ச.ரா. (‘சிந்தா நதி’யில் இருந்து...)
உன்னுள் கருவாகி, உனக்குள் உருவான சின்னஞ்சிறு செடி நான். மண்ணுள் நான் வீழ்ந்து, மெள்ள உதிரும் வரை என்னுள்... நீ வாழ்வாய்!
பெயரை உடையவன்தானே பேரன்.
‘எனக்குத் தமிழ் மட்டும் தெரிஞ்சதாலதான், தமிழ்ப் புத்தகம் மட்டும் வாங்கினேன். அதனால, கடனாளியா மட்டும் இருக்கேன். ஆங்கிலமும் தெரிஞ்சிருந்தா... நாம எல்லாம் நடுத்தெருவுலதான் நின்னிருப்போம்.’
இனி, அந்த வீடு அக்கா வாழ்ந்த வீடு அல்ல; அக்கா வந்து போகும் வீடு.
‘‘நான் மலர்ந்த தொப்புள் கொடியின் இன்னொரு பூ. என் உதிரத்தின் பங்காளி. வேற்றுருவன் ஆனாலும் என் மாற்றுருவன். நான் உண்ட மிச்சப் பாலின் ருசி அறிந்தவன். ஆதலால், என் பசி அறிந்தவன். என் நாணயத்தின் இன்னொரு பக்கம். துக்கத்தில் எனைத் தாங்கும் தூண். சக ஊன்!’’
மண் சட்டியில ஆயா வெக்கிற மீன் குழம்போட ருசியை இன்னிக்கி வரைக்கும் இவன் வேற எங்கயும் சாப்பிட்டதில்ல. மீன் குழம்பு இல்ல, அது தேன் குழம்பு.
‘இதோ உன் மடியில் அமர்ந்திருக்கும் குழந்தைக்கு நீ தாய்மாமன். இவன் உன் சகோதரியின் உதிரம். அலைக்கழித்தோடும் இவன் உதிர நதியில் உன் வம்சத்தின் துளியும் கலந்திருக்கிறது. இவனைப் பெற்றவர்கள் பக்கத்தில் இருந்தாலும், காலம் முழுவதும் இவன் மீது காயம் படாமலும், காற்று படாமலும் காக்க வேண்டியது உன் கடமை. தாய்மாமன் என்பவன் உண்மையில் ஒவ்வொரு குழந்தைக்கும் ஓர் ஆண் தாய்!’’
என் தாய் உதிரத்தின் மிச்சம் என அவர்களை நானும், தன் தமக்கை உதிரத்தின் மிச்சம் என என்னை அவர்களும் நினைத்தபடி நகர்கிறது வாழ்க்கை!
காலம் காலமாக ஆயாக்கள் இப்படித்தான் வடை சுடுகிறபோது காக்கைகளிடமும்; தின்பண்டங்கள் சுடுகிறபோது பேரன்களிடமும் பறிகொடுத்துவிடுகிறார்கள்.
எல்லோரையும் இணைக்கும் ஒரே புள்ளி... காதலுக்கு அடுத்து, மரணமாகத்தானே இருக்க முடியும்?
நெல் வயலில் ரோஜாகூட களைதான்
தாத்தா - பேரன் உறவில்... ப்ரியமும், வாஞ்சையும், தோழமையும் தாண்டி இருவருக்குள்ளும் ஒரு குழந்தமை ஆயிரமாயிரம் வண்ணங்களுடன் தலை காட்டுகிறது.
பூ, தலையில் இருந்தது. தலை, தரையில் இருந்தது. இரண்டும் அணிலாடும் முன்றிலில் இருந்தன.
‘முத்தம் கொடு’ என்று நான் கேட்க; ‘முடியாது’ என்று நீ வெட்கப்பட; ‘அச்சம் தவிர்’ என்று நான் சொல்ல; ‘ஆண்மை தவறேல்’ என்று சிரித்தபடி நீ பதில் சொல்ல; அய்யோ! என் கண்ணம்மாஎன்னை விடச் சிறந்த கவிஞர் நீதானடி.
‘மகனே! ஓ மகனே! என் விந்திட்ட விதையே! செடியே! மரமே! காடே! மறுபிறப்பே! மரண சௌகர்யமே! வாழ்!’ - கமல்ஹாசன்
உன் மெத்தென்ற பூம்பாதம் என் மார்பில் உதைக்க... மருத்துவமனையில் நீ பிறந்ததும் உனை அள்ளி என் கையில் கொடுத்தார்கள். என் உதிரம் உருவமானதை, அந்த உருவம் என் உள்ளங்கையில் கிடப்பதை; குறுகுறு கை நீட்டி என் சட்டையைப் பிடித்து இழுப்பதை; கண்ணீர் மல்கப் பார்த்துக்கொண்டு இருந்தேன்.
என் முப்பாட்டன் காடு திருத்தினான். என் பாட்டன் கழனி அமைத்தான். என் தகப்பன் விதை விதைத்தான். உன் தகப்பன் நீர் ஊற்றினான். நீ அறுவடை செய்துகொண்டு இருக்கிறாய். என் தங்கமே! உன் பிள்ளைக்கான விதையையும் உன் உள்ளங்கையில் வைத்திரு. உழைக்கத் தயங்காதே. உழைக்கும் வரை உயர்ந்துகொண்டு இருப்பாய்.