More on this book
Community
Kindle Notes & Highlights
அலையின் வேகம் குறைந்தாலும், நதி எப்போதும் கரையுடன் உரையாடிக்கொண்டுதான் இருக்கும்.
தினம் தினம் நமக்குள் நடக்கும் சின்னச் சின்ன சண்டைகளின் ஊடல்களில் நீ வாடிவிடுகிறாய்.
ஊடல்களுக்குப் பிறகு நடக்கும் பெரிய பெரிய சமாதானங்களில் நீ மலர்ந்தும்விடுகிறாய்.
வாடிய பின் மலரும் ஒரே பூ நீதானடி!
உன்னை மலரவைக்கவே வாடவைக்கிறேன் என்பது உனக்குத் தெரியாதா என்ன?
உலகிலேயே மிகப் பெரிய இன்பம் எது? தாய் மடியா? காதலியின் முத்தமா? மனைவியின் நெருக்கமா? கொட்டிக்கிடக்கும் செல்வமா? எதுவுமே இல்லை.
‘தம் மக்கள் மெய்த் தீண்டல் உயிருக்கு இன்பம்’
தீயைப் படித்து தெரிந்துகொள்வதைவிட, தீண்டிக் காயம் பெறு.
எங்கும், எதிலும், எப்போதும் அன்பாய் இரு.
உழைக்கும் வரை உயர்ந்துகொண்டு இருப்பாய்.
எத்தனை காலம்தான் உன் தகப்பன் உன் அருகில் அமர்ந்து விசிறிக்கொண்டு இருப்பான்? உனக்கான காற்றை நீயே உருவாக்கப் பழகு.
உன் உதிரத்திலும் அந்தக் காகித நதி ஓடிக்கொண்டே இருக்கட்டும்.
யாராவது கேட்டால், இல்லை எனினும் கடன் வாங்கியாவது உதவி செய். அதில் கிடைக்கும் ஆனந்தம் அலாதியானது.
உறவுகளிடம் நெருங்கியும் இரு, விலகியும் இரு. இந்த மண்ணில் எல்லா உறவுகளையும்விட மேன்மையானது நட்பு மட்டுமே. நல்ல நண்பர்களைச் சேர்த்துக்கொள். உன் வாழ்க்கை நேராகும்.