சமீபத்தில் ஆங்கிலத்தில் ஒரு கவிதை படித்தேன். நான்ஸி வில்லியர்ட் என்கிற பெண் கவிஞர் எழுதிய அந்தக் கவிதை... ‘வான்கூவர் நகரத்தில் ரயில் நிலையம் ஒன்றுண்டு. மரக் கட்டைகளால் ஆன அதன் நடைபாதையில் முன்பொரு முறை என் சிறு வயதில் அம்மாவும் நானும் ரயிலுக்காகக் காத்திருந்தோம். அங்கு வைத்துதான் அம்மாவின் தம்பி இறந்துபோனதை யாரோ வந்து அம்மாவிடம் சொன்னார்கள். கன்னங்களைத் தாண்டி கால் விரல்களில் கண்ணீர்த் துளிகள் விழுந்த பிறகும் அதிர்ச்சியுடன் அம்மா அந்த நடைபாதையிலேயே நின்றுகொண்டிருந்தாள். ‘உலகம் என்பது அணுக்களால் ஆனது நாம் ஒரு மேஜையைத் தொடுகிறபோது மேஜையும் நம்மைத் தொடுகிறது’ என்பது உண்மையானால் அன்று அந்த
...more