More on this book
Community
Kindle Notes & Highlights
நான் மலர்ந்த தொப்புள் கொடியின் இன்னொரு பூ. என் உதிரத்தின் பங்காளி. வேற்றுருவன் ஆனாலும் என் மாற்றுருவன். நான் உண்ட மிச்சப் பாலின் ருசி அறிந்தவன். ஆதலால், என் பசி அறிந்தவன். என் நாணயத்தின் இன்னொரு பக்கம். துக்கத்தில் எனைத் தாங்கும் தூண். சக ஊன்!’’
தன் கிளையில் தன் வண்ணத்தையும் வடிவத்தையும் உள்வாங்கிப் பூத்த பூவைப்பற்றிய செடியின் பெருமிதம் அப்பா மகன் - உறவு எனில், தன் காலடியில் தன் விழுதும் தரை தொட்டு வேர் ஊன்றுவதைப் பார்க்கும் அமைதியின் பெருநிலையே தாத்தா - பேரன் உறவோ?
அலையின் வேகம் குறைந்தாலும், நதி எப்போதும் கரையுடன் உரையாடிக்கொண்டுதான் இருக்கும்.