அபிதா [Abitha]
Rate it:
Read between May 17 - May 18, 2021
3%
Flag icon
‘இதுதாண்டி தாஜ்மஹால்’, ‘இதுதான் காஞ்சிபுரம் கைலாசநாதர்
3%
Flag icon
கோயில்’, ‘இதுதான் அகண்ட காவேரி’, ‘இதுதான் நம் பூர்வீகம், சொந்த மண்ணைத் தொட்டுக் கண்ணில் ஒத்திக்கோ. வாயில் கூட கொஞ்சம் அள்ளிப் போட்டுக்கோ’ன்னு அப்புறமாவது இடம் இடமா அழைச்சுண்டு போய்க் காண்பிக்க நீங்கள் இருக்கேள், இல்லையா? அப்படி ஒரு கொடுப்பனை இல்லாட்டாலும் போறது. காலடியில் கல் தடுக்கினால் பிடிச்சுக்கமாட்டேளா?
3%
Flag icon
நேரத்தைக் காசாக எண்ணி எண்ணிக் கழித்த அந்நாளில்:
5%
Flag icon
எல்லாமே தெரிந்த வரைக்கும்தானே! மிச்சமெல்லாம் துணிச்சல்தான். வாழ்க்கையின் நியதியே துணிச்சல்தான்.
7%
Flag icon
உண்மையில் கேலியா? உண்மையே கேலிதானா? ராஜா மணந்த பிச்சைக்காரி ராணியாகிவிடலாம்; ஆனால் ராணி மணந்த ஏழை, ராஜா இல்லை. என்றும் அவன் பிரஜைதான்.
8%
Flag icon
ஒரு சொல்லுக்கு எதிர்ச்சொல் ஒன்பது சொல்;
12%
Flag icon
என் புருவங்களின் கீழிருந்து அவளை நோக்குகிறேன். அவள் கையில் பிடித்த மெழுகுவர்த்தியின் சுடரில் அவள் முகம் ரோஜாவின் செவ்விதழில் ஏற்றிக்கொண்டிருக்கிறது. எடுப்பான மூக்கின் கீழ், உதடுகள் சிற்பச் செதுக்கலில் அமைதியாக உறங்குகின்றன. நடு வகிடிலிருந்து கூந்தல் வங்கி வங்கியாய், நீர்வீழ்ச்சிபோல் இருமருங்கிலும் இறங்குகிறது. அவள் உடுத்திய மஞ்சள் ‘ஸேட்டின்’ சேலை, அங்கத்திரட்சிகள் மேல் பாயும் அலைகளில், இந்த முக்கால் இருள், மிச்சம் கால் ஒளியாட்டத்தில் புலிக் கோடுகள் பிறந்து விளையாடுகின்றன.
12%
Flag icon
சாவித்ரியின் உடல்வாகும் சற்று வாளிப்புத்தான்.
16%
Flag icon
இலைகளின் சந்து வழி, காற்று கத்தியே தன் காமத்தைத் தீர்த்துக் கொள்வதுபோல் ஊளையிட்டது.
17%
Flag icon
அவள் விழிகளின் ஆழம் எனக்கு என்றுமே பிடிபட்டதில்லை.
18%
Flag icon
‘உடம்பு கால்; மனசு முக்கால்’
18%
Flag icon
இன்பங்களுக்கு இதயம் என்று என் துணிபு.
22%
Flag icon
உப்பும் புளியும் பக்குவமாய்க் கூடினதால் மட்டும் ருசி கிட்டிவிடுவதில்லை. அன்னமிட்டாரின் எண்ணமும் கலந்த ரஸவாதம்தான் நெஞ்சு நிறைகிறது.
31%
Flag icon
உடல் ஒரு கூடு எனில் இதயம் அதனில் குருவி.
39%
Flag icon
அகந்தையைப் பங்காக அவர்கள் எடுத்துக்கொண்டபின் மிச்சமாய் எஞ்சிய அகத்தையும் அழித்துவிடுகிறார்கள்.
40%
Flag icon
என்னுள் நான் காணும் சூன்யத்தில், எனக்கு வைக்கும் பெரிய சூன்யத்துள் மறைந்து போன சின்ன சூன்யம்.
40%
Flag icon
தென்றலின் இதவு உடலின் ரோமக்கால்களில் வழி உள் புகுவது உணர்கிறேன்.
41%
Flag icon
என்னைப் போல் ஒரு சின்ன உயிர், உடல் கூட்டினின்று விடுபட்டு, அனலாகி, புனலாகிப் புவியுமாகி, இப்பரந்த வெளியின் பேருயிருமான பின்னர், அந்தப் பாஷை எனக்குப் புரியாதா புரியாதா புரியாதா...
41%
Flag icon
வான் பாதியும் பூமியின் பாதியும் விளிம்பு சேர்ந்த முழு உருட்டு இப்பூமி.
41%
Flag icon
நித்யத்வம் உகுத்த கண்ணீர்த் துளி. அதன் நீரோ...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
41%
Flag icon
நிழல்கள்...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
41%
Flag icon
நாம் எல்லோருமே கண்ணீரின் நிழல்கள்.
42%
Flag icon
நானொரு பச்சோந்தி நானொரு பைத்யம் நானொரு குழந்தை எனக்கு உடனே கோபம் - உடனே சிரிப்பு
42%
Flag icon
காரணம் கேட்டால் காரணம் அறியேன் பட்டது விட்டு நான் வெட்கம் கெட்டவள்
42%
Flag icon
கரடிமலை
42%
Flag icon
பாலின் கருணை, தாய்மை.
43%
Flag icon
அவை தமக்குத்தாமே ஏதோ கவிதை புரிந்துகொண்டிருக்கின்றன. மானிடர் மக்கு.
43%
Flag icon
நெகிழ நெஞ்சம், பார்க்கப் பாக்கியம், மலரக் கண், படைத்தவர் கண்டுகொண்டேயிருக்கலாம்.
43%
Flag icon
காண்பதும்
43%
Flag icon
கண்டதில் இழைவதுமன்றி கவிதையில் புரிந்து ஆ...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
43%
Flag icon
இப்போது இருண்டது நேரமா? என் கண்களா?
46%
Flag icon
இடுப்பில் குடத்துக்கு இடம், குடத்தின் செருக்கு. இடையில் குடம், இடுப்பின் செருக்கு.
47%
Flag icon
சென்று போன காலத்துள் புதையும், தான் மென்று உமிழ்ந்த மண்ணில் புதைந்த மண்உணிப் பாம்பு.
47%
Flag icon
சென்றுபோனதற்கும் இனி வரப்போவதற்கும் வித்தியாசம் என்ன? இரண்டுமே நடுநின்ற தருணத்தின் தூலச் சாயல்கள்தான்.
47%
Flag icon
நமக்குக் கவலையைக் கொடுத்த கவலையற்ற கடவுள் கொடுத்து வைத்தவர்.
52%
Flag icon
அ - சிமிழ் போன்ற வாயின் லேசான குமிழ்வில், - பி - உதடுகளின் சந்திப்பில், தா - நாக்கின் தெறிப்பில்.
52%
Flag icon
அற்ப விஷயம்; சொற்ப சம்பவம்; அடிவயிறு வெள்ளி வீச, கடல் வயிற்றில் மீன்குட்டி துள்ளி விழுந்து, தனிப் படுகையில் கடலென்றும் மீனென்றும் கண்ட தனிப்பேதம் பொருளா? பொருள் காட்டும் மருளா? அல்லது பொருள் காண்பதே மருளா?
54%
Flag icon
அவள் நடக்கையில் குடத்தில் ஜலம் துளும்பிச் சிரிக்கிறது.
58%
Flag icon
நினைத்ததை நினைந்ததும் தொண்டை உலர்ந்தது என்று உணர்ந்ததும் தொண்டை உலர்ந்தது.
59%
Flag icon
தொடல். உடைமையின் முத்திரை. உறவின் வழித் துணை.
60%
Flag icon
அன்பிட்டவர்களின் குறைகளே அவர்களிட்ட அன்பின் விசேஷ ருசி.
61%
Flag icon
என்றும் எங்களுக்கு விடுதலையில்லாமல் எங்களைத் தங்களுடன் கவ்விக்கொண்ட எங்கள் நிழல்கள்.
66%
Flag icon
ஆனால் நம்புவதும் வாழ்வதும் என்னவோ வாசனைகள், பிம்பங்கள், நினைவுகள், கனவுகள் என்னும் சத்யமாயையில்தான்.