வாடிவாசல் [Vaadivaasal]
Rate it:
44%
Flag icon
அப்பனை காரி கொந்தி எறிந்தபோது தான் சற்றுத் தள்ளி நின்றது பிச்சிக்கு ஞாபகம் இருந்தது. "என்ன ஆனாலும், நீ குறுக்கே விளுந்திராதே. அப்பன் ஆணைடா. எனக்கப்புறம் இந்த வாடியெல்லாம் ஒன் ராச்யம்தான், பொறுத்துக்க. காரி உனக்கு இப்போ இல்லே," என்று எச்சரித்து, "பையனை விட்டுடாதீங்க வாடிவாசல்லே," என்று பக்கத்தில் நின்றவர்களிடம் தன்னைச் சிறைப்படுத்திவிட்டு காரி மேலே பாய்ந்ததை நினைத்துக் கொண்டான். அப்பன் குடல் வெளியே வந்தபோது ஊற்றாக பெருகி வழிந்த ரத்த வாசனை இப்போது அவன் மூக்கில் நெடியேறிற்று. காளையின் கொம்புக்குக் கண்களைத் திருப்பினான்.