வதைமுகாம்கள் குறித்து இதுவரை எழுதப்பட்ட நூல்களின் எண்ணிக்கையைத் தோராயமாகக்கூட யூகிப்பது சாத்தியமில்லை. முகாம்களில் சிறைபட்டு மீண்டவர்களின் நேரடி சாட்சியங்கள், முகாம்களில் இறந்துபோனவர்களின் டைரிக் குறிப்புகள், பலியானவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் நினைவுக்குறிப்புகள், அதிகாரிகள், சிறைக்காவலர்கள், மருத்துவர்களின் நினைவுகள் ஆகியவற்றின் குவியல்கள் ஒரு பக்கம். இன்னொரு பக்கம், இந்தப் பிரதிகளையெல்லாம் கொண்டு நிகழ்த்தப்படும் விவாதங்கள், முன்வைக்கப்படும் பார்வைகள், கண்டறியப்படும் உண்மைகள் ஆகியவை மலைக்க வைக்கும் அளவுக்கு உயர்ந்துநிற்கின்றன.