முகாம் நடைமுறைகளை ஆராய்ந்த உளவியல் நிபுணர்கள் கைதி களிடம் இருந்த குழந்தைத்தன்மையைப் பற்றிக் குறிப்பிடுகிறார்கள். என்ன, ஏது என்று புரியாவிட்டாலும் அப்பா கடிந்துகொண்டவுடன் அவர் கொடுக்கும் உத்தரவுகளைப் பின்பற்றும் குழந்தையைப்போல் கைதிகள் முகாமின் கட்டளைகளை ஏற்றுக்கொண்டனர் என்கிறார்கள் அவர்கள். கொந்தளிக்கும் உணர்வுகளுடன் வந்துசேரும் யூதர்கள் நாள்பட நாள்பட குழந்தைகளாக மாறிவிடுகிறார்கள்.