ஒரே ஒரு வாளி நீரில் ஒரு கும்பலே குளித்துக்கொள்ளவேண்டும். கை, கால், முகம் போன்றவற்றைக் கழுவ ஆரம்பித்தால் நீர் போதாது என்பதால் பெரும்பாலானோர் தேய்ந்துபோன கைகளில் ஒருமுறை நீரை அள்ளியெடுத்து தங்கள் பாலுறுப்புகளை மட்டும் சுத்தப்படுத்திக்கொள்வார்கள். அதையும்கூட காவலர் முன்புதான் செய்யவேண்டும். ஸோஃபியா என்பவர் சொல்கிறார். ‘விலங்குளைப் போல் நாங்கள் எங்களைச் சுத்தப்படுத்திக்கொள்வதை அந்தக் காவலர் பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டார். அதேபோல் நாங்களும் அவர் இருப்பதைப் பொருட்படுத்த மாட்டோம்.’