எங்கெல்லாம் அதிகாரம் ஒன்றுகுவிக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் பாசிசத்துக்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கி விடுகின்றன. அங்கெல்லாம் மனிதர்கள் சுதந்தரமாகத் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தவோ சுயமாக நடந்துகொள்ளவோ முடிவதில்லை. இந்நிலையை அடைய காவல்துறை ஒடுக்குமுறை மட்டுமே தேவைப்படும் என்றில்லை. மக்களுக்குத் தேவையான தகவல்கள் மறுக்கப்படலாம், திரிக்கப்படலாம். நீதித்துறையின் அடித்தளம் அறுக்கப்படலாம். கல்வித்துறை முடக்கப்படலாம். இவையெல்லாம் பாசிசத்தின் அறிகுறிகள் என்றார் லெவி.