More on this book
Kindle Notes & Highlights
‘ஒரு விலங்கைப்போல் உணர்ந்தேன். எல்லோருக்கும் முன்பு மலம் கழிக்கவேண்டியிருந்ததை என் வாழ்வில் ஏற்பட்ட மிகப் பெரிய அவமானம் என்று நினைத்துக்கொண்டேன்’ என்கிறார் ஒரு பெண். ‘அவமானத்துக்குரிய எதையாவது செய்யவேண்டியிருக்கும்போது கண்களை மூடிக்கொண்டுவிடுவேன். இருள் என்னைக் காப்பாற்றும் என்று நினைத்துக்கொள்வேன்’
துடைத்து அழிக்கப்பட்ட பலகைபோல் அவர்கள் இப்போது நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் கண்களில் அதிர்ச்சி இல்லை, பயம் இல்லை. அவர்களிடம் நாணம் இல்லை. மானம் பறிபோய்விட்டதே என்னும் கோபத்தையோ ஆற்றாமையையோ அவர்களிடம் காணமுடியவில்லை. வெறுமனே நின்றுகொண்டிருந்தார்கள், அவ்வளவுதான். சிலர் தரையை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தனர்.
Patri Raman liked this
கிட்டத்தட்ட வாழ்நாள் முழுக்க ஒருமுறைகூட துவைக்காமல் இந்த ஆடைகளைப் பலர் அணிந்திருந்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
இவர் பரவாயில்லை, சில சமயம் ஒரு படுக்கையில் மூவர் படுத்துறங்க வேண்டும். இதுவும்கூடப் பரவாயில்லை என்று சொல்லும்படி பல முகாம்களில் சில அடி அகலங்களில் இருக்கும் படுக்கையில் ஏழு பேர் வரை நெருக்கியடித்து உறங்கவேண்டும். ஒருவர் தலை வைத்துப் படுத்துக்கொள்ளும் இடங்களில் பலர் கால்களை நீட்டிக்கொண்டிருப்பார்கள். துர்நாற்றம் வயிற்றைக் கலக்கும். ஆனால், வேறு வழியில்லை. குளிரில் கால்களைச் சுத்தப்படுத்துவது இயலாத காரியம். தவிரவும் அங்கே குளிக்கும் வழக்கம் கொண்டவர்கள் அதிகம் பேர் இல்லை. இதுபோக, காலணிகளைப் பாதுகாத்துக்கொள்ளவேண்டிய பொறுப்பும் ஒவ்வொருவருக்கும் இருந்ததால் பலர் காலணிகளை அணிந்தபடியே
...more
ஒரே ஒரு வாளி நீரில் ஒரு கும்பலே குளித்துக்கொள்ளவேண்டும். கை, கால், முகம் போன்றவற்றைக் கழுவ ஆரம்பித்தால் நீர் போதாது என்பதால் பெரும்பாலானோர் தேய்ந்துபோன கைகளில் ஒருமுறை நீரை அள்ளியெடுத்து தங்கள் பாலுறுப்புகளை மட்டும் சுத்தப்படுத்திக்கொள்வார்கள். அதையும்கூட காவலர் முன்புதான் செய்யவேண்டும். ஸோஃபியா என்பவர் சொல்கிறார். ‘விலங்குளைப் போல் நாங்கள் எங்களைச் சுத்தப்படுத்திக்கொள்வதை அந்தக் காவலர் பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டார். அதேபோல் நாங்களும் அவர் இருப்பதைப் பொருட்படுத்த மாட்டோம்.’
வெப்பத்தை அதிகரித்துக்கொண்டே போனால் என்னாகும்? எவ்வளவு குளிரை ஒரு மனித உடல் தாங்கும்? ஏற்கெனவே எலும்புக்கூடாகத் தேய்ந்துகிடந்த யூதர்களை அள்ளியெடுத்துவந்து இந்த இரு சோதனைகளையும் செய்து பார்த்தார்கள். அதிகபட்ச வெப்பத்தில் தோல் எப்படிச் சுருங்குகிறது என்று கவனித்தார்கள். சரியாக எந்த வெப்பநிலைவரை ஒரு மனிதனால் தாங்கிக்கொள்ளமுடியும் என்பதைக் குறித்துக் கொண்டார்கள். அதேபோல் நிர்வாணமாக யூதர்களைப் பனியில் தள்ளி இதயத்துடிப்பை ஆராய்ந்தார்கள். பனி எப்படி ஒரு மனிதனின் செயல்பாட்டைச் சிறிது சிறிதாகக் குறைக்கிறது, எப்போது கொல்கிறது என்று குறித்துக்கொண்டார்கள். ஜெர்மானிய வீரர்களின் உடல்நிலையைப் பாதுகாக்க
...more
அவர்மீது இன்னொருவர் படுத்துக்கொள்ளவேண்டும். அவர்மீது இன்னொருவர். இப்படி கிட்டத்தட்ட கூரை வரை மனித உடல்கள் படுத்துக்கிடந்தன. பசியிலும் மயக்கத்திலும் பலர் மூச்சைப் பிடித்தபடி இரவு முழுக்கப் படுத்துக் கிடந்தனர். பலர் மயங்கிச் சரிந்துவிட்டனர். விடிந்ததும்தான் தெரிந்தது, அடியில் படுத்துக்கிடந்த நூற்றுக்கணக்கானவர்கள் எப்போதோ இறந்துபோயிருந்தனர்.’
வதைமுகாம்கள் குறித்து இதுவரை எழுதப்பட்ட நூல்களின் எண்ணிக்கையைத் தோராயமாகக்கூட யூகிப்பது சாத்தியமில்லை. முகாம்களில் சிறைபட்டு மீண்டவர்களின் நேரடி சாட்சியங்கள், முகாம்களில் இறந்துபோனவர்களின் டைரிக் குறிப்புகள், பலியானவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் நினைவுக்குறிப்புகள், அதிகாரிகள், சிறைக்காவலர்கள், மருத்துவர்களின் நினைவுகள் ஆகியவற்றின் குவியல்கள் ஒரு பக்கம். இன்னொரு பக்கம், இந்தப் பிரதிகளையெல்லாம் கொண்டு நிகழ்த்தப்படும் விவாதங்கள், முன்வைக்கப்படும் பார்வைகள், கண்டறியப்படும் உண்மைகள் ஆகியவை மலைக்க வைக்கும் அளவுக்கு உயர்ந்துநிற்கின்றன.
பதிப்பாளர்கள் சொன்னது சரிதான். வீஸெலின் புத்தகம் அவர் எதிர்பார்த்தபடி விற்கவில்லை. 900 பக்கங்களுக்கு எழுதிவைத்தால் இப்படித்தான் ஆகும் என்று சொல்லிவிட்டார்கள். அவர்கள் சொல்வதில் உள்ள நியாயத்தைப் புரிந்துகொண்ட வீஸெல் மீண்டும் தன் பிரதியில் பணியாற்ற ஆரம்பித்தார். இரக்கமின்றிப் பக்கங்களை வெட்டியெடுத்து, சிறிதாக்கி மீண்டும் வெளியிட்டார். இப்போது நல்ல விமரிசனங்கள் கிடைத்தன, மதிக்கத்தக்க ஆளுமைகளிடமிருந்து பாராட்டுகள் குவிந்தன. இருந்தும் விற்கவில்லை.
எங்கெல்லாம் அதிகாரம் ஒன்றுகுவிக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் பாசிசத்துக்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கி விடுகின்றன. அங்கெல்லாம் மனிதர்கள் சுதந்தரமாகத் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தவோ சுயமாக நடந்துகொள்ளவோ முடிவதில்லை. இந்நிலையை அடைய காவல்துறை ஒடுக்குமுறை மட்டுமே தேவைப்படும் என்றில்லை. மக்களுக்குத் தேவையான தகவல்கள் மறுக்கப்படலாம், திரிக்கப்படலாம். நீதித்துறையின் அடித்தளம் அறுக்கப்படலாம். கல்வித்துறை முடக்கப்படலாம். இவையெல்லாம் பாசிசத்தின் அறிகுறிகள் என்றார் லெவி.
பொதுவாக நாம் அதிகம் காணும் பதிவுகள் வதைமுகாம்களின் கொடூரங்களை விவரிப்பவை. இந்த வகைப் பதிவுகளின் தேவையைப் புரிந்துகொள்ளமுடிகிறது. அதே சமயம் இந்தப் பதிவுகள் நம் உணர்வுகளைப் பாதித்தாலும் நம் புரிதலை அதிகரிப்பதில்லை என்கிறார் ஆலன். வதைமுகாம் என்பது அதில் சிக்கியவர்களின் கொடுமையான அனுபவங்கள் மட்டுமேயல்ல. அவை நம்மை உலுக்கியெடுக்கும் அதே சமயம், நம்மை ஒருவகையில் மழுங்கடிக்கவும் செய்கின்றன. ‘ஐயோ! கொடுமை!’ என்பதே நம் அதிகபட்ச உணர்வு வெளிப்பாடாக இருக்கிறது. ஹாலோகாஸ்ட் நம்மை அறிவுபூர்வமாகச் சிந்திக்க வைப்பதில்லை. நம் புரிதலைப் பாதிப்பதில்லை. அதற்கு வதைமுகாம் அனுபவப் பதிவுகளைத் தாண்டி நாம் சென்றாகவேண்டும்
...more
வாழ்வில் முழுமையான மகிழ்ச்சி என்றொன்று இல்லை என்பதை நாம் நிச்சயம் ஒருநாள் உணர்ந்துகொள்வோம். அதேபோல் முழுமையான துன்பம் என்பதும் இல்லை. பிரைமோ லெவி
முகாம் நடைமுறைகளை ஆராய்ந்த உளவியல் நிபுணர்கள் கைதி களிடம் இருந்த குழந்தைத்தன்மையைப் பற்றிக் குறிப்பிடுகிறார்கள். என்ன, ஏது என்று புரியாவிட்டாலும் அப்பா கடிந்துகொண்டவுடன் அவர் கொடுக்கும் உத்தரவுகளைப் பின்பற்றும் குழந்தையைப்போல் கைதிகள் முகாமின் கட்டளைகளை ஏற்றுக்கொண்டனர் என்கிறார்கள் அவர்கள். கொந்தளிக்கும் உணர்வுகளுடன் வந்துசேரும் யூதர்கள் நாள்பட நாள்பட குழந்தைகளாக மாறிவிடுகிறார்கள்.