. ஒலகம் போவப்போவப் போய்க்கிட்டே இருக்கும்பா. அதுக்கு ஒரு முடிவே கெடையாது. போய்க்கிட்டு இருக்கும்போது கொஞ்சம் வழி தவறுனா மறுபடியும் இந்தப் பக்கமே வர்ற மாதிரி ஆயிரும்.
எத்தனை வருசக்கணக்காய் உடனிருந்தாலும் சில சந்தர்ப்பங்கள் அமையும்போதுதான் சில முகங்கள் தென்படுகின்றன. சந்தர்ப்பங்களே வாய்க்காமல் உள்ளே மூடிக் கிடக்கும் முகங்கள் எத்தனையோ. வெளிப்படாமலே அவை புதைந்துபோய் விடுகின்றன.