“ஆமாம். நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால், உங்கள் அண்டைவீட்டுக்காரரும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு 34 சதவீதம் அதிக வாய்ப்பு உள்ளது,” என்று தன் குறிப்பிலிருந்து படித்துக் காட்டிய கேத்தரீன், மேலும் தொடர்ந்தார். “அது மட்டுமல்ல, உங்கள் வாழ்க்கைத் துணைவரும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு 8 சதவீதம் அதிக வாய்ப்பு உள்ளது. உங்கள் வீட்டிலிருந்து ஒரு மைல் தொலைவிற்குள் வாழ்கின்ற உங்கள் சகோதரனோ அல்லது சகோதரியோ மகிழ்ச்சியாக இருப்பதற்கு 14 சதவீத அதிக வாய்ப்பு இருக்கிறது. உங்கள் வசிப்பிடத்திலிருந்து ஒரு மைல் தொலைவில் வாழ்கின்ற உங்கள் நண்பர் மகிழ்ச்சியாக இருப்பதற்கும் 25 சதவீத அதிக வாய்ப்பு உள்ளது. உங்களுடைய நண்பரின்
...more

