“இதற்கு அறிவியற்பூர்வமான ஆதாரங்கள் இருக்கின்றன,” என்று கேத்தரீன் கூறினார். “உங்களுக்கு ஒரு குண்டான நண்பர் இருந்தால், உங்கள் எடை சராசரிக்கும் கூடுதலாக இருப்பதற்கு 57 சதவீதம் கூடுதல் வாய்ப்பு இருக்கிறது. நீங்கள் புகைபிடிப்பவராக இருந்து, உங்கள் நண்பர் தன் புகைபிடிக்கும் பழக்கத்தை விட்டொழித்துவிட்டால், நீங்களும் உங்களுடைய புகைபிடிக்கும் பழக்கத்தை விட்டொழிப்பதற்கு 30 சதவீதம் கூடுதல் வாய்ப்பு இருக்கிறது.

