“ஆனால் விஷயங்கள் நான் நினைத்ததுபோல நிகழவில்லை. குறைந்தபட்சம் துவக்கத்தில் அப்படி நிகழவில்லை. வீட்டில் எனக்கு ஏகப்பட்ட வீட்டு வேலைகள் முளைத்தன. நான் என் கல்லூரி வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, என் வீட்டு வேலைகளை கவனித்துக் கொண்டேன். என் கல்லூரி வேலைகளை எப்படியும் மாலையிலும் இரவிலும் முடித்துக் கொள்ளலாம் என்ற நினைப்பு என்னிடம் இருந்ததுதான் அதற்குக் காரணம்.

