More on this book
Community
Kindle Notes & Highlights
சிறந்த ஆட்டக்காரருக்கும் மிகச் சிறந்த ஆட்டக்காரருக்கும் இடையே இருந்த இடைவெளி ஒரு சதவீதம் மட்டும்தான்.”
எல்லாவற்றிலும் உங்களால் வெல்ல முடியாமல் போகலாம். ஆனால் நேற்றைவிட இன்று மேம்பாடு அடைய எதையாவது செய்ய நீங்கள் முயன்று கொண்டிருந்தால், வெற்றி பெற்றவரின் மனப்போக்கை உங்களால் எப்போதும் தக்க வைத்துக் கொள்ள முடியும்.
தொடர்ச்சியான, குறிக்கோளுடன்கூடிய, சிறிய மேம்பாடுகளை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் மட்டுமே தங்களால் வெற்றியடைய முடியும் என்பதை அவர்களுடய அனுபவங்களும் அவர்களது உள்ளுணர்வும் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்திருந்தன.
“முதலாவது விதி: நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை உங்கள் மனைவியைத் தவிர வேறு யாருக்கும் நீங்கள் தெரிவிக்கக்கூடாது.
சிறந்த ஆட்டக்காரருக்கும் மிகச் சிறந்த ஆட்டக்காரருக்கும் இடையே இருந்த வித்தியாசம் வெறும் 1 சதவீதம்தான்.
பிறரைக் காட்டிலும் 100 சதவீதம் மேலானவராக உங்களால் ஆக முடியாது. ஆனால் நம் ஒவ்வொருவராலும் நூற்றுக்கணக்கான விஷயங்களில் 1 சதவீத மேம்பாட்டை அடைய முடியும்.
எல்லாவற்றிலும் உங்களால் வெல்ல முடியாமல் போகலாம். ஆனால் நேற்றைய தினத்தைவிட இன்று மேம்பாடு அடைய ஏதேனும் செய்ய நீங்கள் முயன்று கொண்டிருந்தால், வெற்றி பெற்றவரின் மனப்போக்கை உங்களால் எப்போதும் தக்க வைத்துக் கொள்ள முடியும்.
எல்லோராலும் மகத்தான சாதனைகளைப் படைக்க முடியாவிட்டாலும்கூட, தாங்கள் இப்போது இருப்பதைவிட மேம்பட்ட ஒருவராக ஆக அவர்களால் கண்டிப்பாக முடியும்.
இப்போது இருப்பதைவிட வேகமாக, உயரமாக, வலுவாக ஆவதற்குத்தான் முயல வேண்டுமே தவிர, உடனடியாக உச்சகட்ட வேகத்திற்கோ, உச்சகட்ட உயரத்திற்கோ அல்ல...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
“நான் என் ஊக்குவிப்பை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்றால், நான் என் செயல்நடவடிக்கைகளை அதிகரித்துக் கொள்ள வேண்டும்
நீங்கள் ஏதாவது ஒன்றைத் துவக்க வேண்டும் என்பதுதான் அதற்கான பதில். அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை. நீங்கள் அதைச் சாதித்து விட்டால், உங்களுடைய ஊக்குவிப்பு கணிசமாக அதிகரிக்கும். அதனால் நீங்கள் இன்னும் அதிகமான நடவடிக்கைகளில் இறங்குவீர்கள்
அதிகரிக்கும்
செயல்நடவடிக்கைகளை அதிகரிப்பதுதான் ஊக்குவிப்பை அதிகரிப்பதற்கான சிறந்த வழி. 2. நான் அதிகமான விஷயங்களைச் செய்தால், இன்னும் அதிகமான விஷயங்களைச் செய்ய நான் ஊக்குவிக்கப்படுவேன். 3. துவக்குவதற்கான ஒரே வழி செயலில் இறங்குவதுதான், அது எவ்வளவு சிறிதாக இருந்தாலும் பரவாயில்லை. 4. என் இலக்குகள் குறித்து நான் தெளிவாக இருக்க வேண்டும். 5. என் இலக்குகளை நான் அடைவதற்கு ணக்கு உதவும் செயல்நடவடிக்கைகளை மட்டும்தான் நான் தோர்ந்தெடுக்க வேண்டும். பின் அவற்றை மிகச் சிறப்பாகச் செய்ய நான் முயல வேண்டும்.
“வெளிப்புற ஆற்றல் ஒன்றின் தாக்கம் இல்லாதவரை, அசையா நிலையில் இருக்கும் ஒரு பொருள் தொடர்ந்து அசையா நிலையிலேயே இருக்கும், இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு பொருள் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும்.”
“ஆனால் விஷயங்கள் நான் நினைத்ததுபோல நிகழவில்லை. குறைந்தபட்சம் துவக்கத்தில் அப்படி நிகழவில்லை. வீட்டில் எனக்கு ஏகப்பட்ட வீட்டு வேலைகள் முளைத்தன. நான் என் கல்லூரி வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, என் வீட்டு வேலைகளை கவனித்துக் கொண்டேன். என் கல்லூரி வேலைகளை எப்படியும் மாலையிலும் இரவிலும் முடித்துக் கொள்ளலாம் என்ற நினைப்பு என்னிடம் இருந்ததுதான் அதற்குக் காரணம்.
ஒரு சிறிய மாற்றத்தை விளைவித்து மிகப் பெரிய பலனை உங்களால் அறுவடை செய்ய இயலும்,”
“ஆர்க்கிமெடிஸ் கூறியது ஏறக்குறைய இதுதான்: ‘மிக நீண்ட, மிக வலுவான ஒரு நெம்புகோலை எனக்குக் கொடுங்கள்; ஒரு நெம்பு மையத்தை எனக்குக் காட்டுங்கள்; நான் நிற்பதற்கு ஓரிடமும் கொடுங்கள்; நான் இந்த பூமியையே அசைத்துக் காட்டுகிறேன்.’ என்னவொரு தன்னம்பிக்கை!”
“நீங்கள் செய்யும் காரியங்களில் மேற்கொள்ளப்படும் சரியான சிறிய மாற்றங்கள், நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளோடு ஒப்பிடப்படும்போது பல மடங்கு பெரிய விளைவுகளைப் பெற்றுத் தரும்.
“ஒரு குளத்தின் நடுவே நீங்கள் ஒரு கல்லை எறிந்தால் அது உண்டாக்கும் அதிர்வலைகள் குளம் முழுவதும் பரவும். 1 சதவீதத் தீர்விலும் அப்படித்தான். நீங்கள் செய்யும் காரியங்களில் சரியான சிறிய மாற்றங்களை நீங்கள் ஏற்படுத்தும்போது, அவை அந்தக் குறிப்பிட்டப் பகுதியில் மட்டுமல்லாமல் அதைச் சுற்றியுள்ள அம்சங்களிலும் நேர்மறையான தாக்கத்தை விளைவிக்கும்.”
‘அன்பான வார்த்தைகள் ஒருபோதும் கேட்கப்படாமல் போவதில்லை. ஆனால் பெரும்பாலான சமயங்களில், அவை சொல்லப்படுவதுதான் இல்லை.’
“இதற்கு அறிவியற்பூர்வமான ஆதாரங்கள் இருக்கின்றன,” என்று கேத்தரீன் கூறினார். “உங்களுக்கு ஒரு குண்டான நண்பர் இருந்தால், உங்கள் எடை சராசரிக்கும் கூடுதலாக இருப்பதற்கு 57 சதவீதம் கூடுதல் வாய்ப்பு இருக்கிறது. நீங்கள் புகைபிடிப்பவராக இருந்து, உங்கள் நண்பர் தன் புகைபிடிக்கும் பழக்கத்தை விட்டொழித்துவிட்டால், நீங்களும் உங்களுடைய புகைபிடிக்கும் பழக்கத்தை விட்டொழிப்பதற்கு 30 சதவீதம் கூடுதல் வாய்ப்பு இருக்கிறது.
“ஆமாம். நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால், உங்கள் அண்டைவீட்டுக்காரரும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு 34 சதவீதம் அதிக வாய்ப்பு உள்ளது,” என்று தன் குறிப்பிலிருந்து படித்துக் காட்டிய கேத்தரீன், மேலும் தொடர்ந்தார். “அது மட்டுமல்ல, உங்கள் வாழ்க்கைத் துணைவரும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு 8 சதவீதம் அதிக வாய்ப்பு உள்ளது. உங்கள் வீட்டிலிருந்து ஒரு மைல் தொலைவிற்குள் வாழ்கின்ற உங்கள் சகோதரனோ அல்லது சகோதரியோ மகிழ்ச்சியாக இருப்பதற்கு 14 சதவீத அதிக வாய்ப்பு இருக்கிறது. உங்கள் வசிப்பிடத்திலிருந்து ஒரு மைல் தொலைவில் வாழ்கின்ற உங்கள் நண்பர் மகிழ்ச்சியாக இருப்பதற்கும் 25 சதவீத அதிக வாய்ப்பு உள்ளது. உங்களுடைய நண்பரின்
...more
உங்களைச் சுற்றி இருக்கும் சூழ்நிலைகள்மீது உன்னிப்பாகக் கவனம் செலுத்தி, நீங்கள் எப்போதும் முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கும் விதத்தில் அச்சூழ்நிலைகளுக்கு ஏற்றபடி செயல்விடை அளிக்க வேண்டும்,”
‘இயல்பான திறமை படைத்தவர்’ என்று யாரும் கிடையாது.
பயிற்சி செய்வதில் நீங்கள் உங்கள் நேரத்தையும் முயற்சியையும் முதலீடு செய்தால், மேம்பாட்டை உங்களால் காண முடியும். மேம்பாட்டை நீங்கள் காண விரும்பினால், பயிற்சிக்கு நீங்கள் உங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்.”
எத்தனை மணிநேரம் நீங்கள் பயிற்சி செய்கிறீர்கள் என்பது மட்டுமே முக்கியமல்ல. நீங்கள் எவ்வளவு தரமாகப் பயிற்சி செய்தீர்கள் என்பதும் சம அளவில் முக்கியம் வாய்ந்ததுதான்.
“நான் என்னை என்னுடன் ஒப்பிடத் தொடங்கியபோதுதான் இறுதியாக அது எனக்கு உறைத்தது. அப்போதுதான் நான் உண்மையிலேயே சாதிக்கத் துவங்கினேன். உங்களை உங்களுடன் ஒப்பிடுவது அதிகப் பலனளிக்கும் என்பதை நீங்கள் கண்டுகொள்ளக் கூடும். நீங்கள் உங்களைவிட 1 சதவீதம் அதிகச் சிறப்பானவராக ஆக வேண்டும். அதுதான் இங்கு முக்கியம்.”
“இப்போது நீங்கள் எங்கே இருக்கிறீர்களோ, அங்கிருந்துதான் நீங்கள் துவக்கியாக வேண்டும்,”
நீங்கள் நாளைய தினத்தைப் பற்றிச் சிந்திக்கலாம், எதிர்காலத்தைப் பற்றிச் சிறிதளவு கனவும் காணலாம். ஆனால் நிகழ்காலத்தில் நீங்கள் சிறப்பாகச் செயல்பட வேண்டும்
“நம்பிக்கை நல்லதுதான். ஆனால் தகுந்த செயல்நடவடிக்கைகளை நீங்கள் மேற்கொள்ளாவிட்டால், அது அவ்வளவு பயனுள்ள உத்தியாக இருக்காது,”
“நம்மில் பலர் நேர்மறையான எண்ணங்களை எண்ணுகிறோம். ஆனால் நாம் கனவு கண்டு கொண்டிருக்கும் விஷயங்களை அடைவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள நம்மைக் கட்டாயப்படுத்துகின்ற ஒரு திட்டத்தை நாம் செயல்படுத்துவதில்லை. வெறுமனே ஆசைப்பட்டால் மட்டும் போதாது — களத்தில் இறங்க வேண்டும்.”
“தாமஸ், அப்படியென்றால், நீங்கள் எங்கே செல்ல விரும்புகிறீர்கள் என்பதையும், அங்கே சென்றடைவதற்கு நீங்கள் என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்வதுதான் உங்கள் இலக்கை அடைவதற்கான திறவுகோல். பிறகு விடாமுயற்சியும் தாக்குப்பிடிக்கும் திறனும் உங்களை அங்கே கொண்டு சேர்த்துவிடும், அப்படித்தானே?”
யாரும் உங்கள் உதவிக்கு வரப் போவதில்லை. நீங்கள்தான் உங்களுக்கு உதவி.”
உங்கள் வாழ்வில் நீங்கள் எவ்வளவு குறைவான மகிழ்ச்சியைக் கொண்டிருக்கிறீர்களோ, புதுவருடத் தீர்மானங்களை அமைப்பதில் நீங்கள் அவ்வளவு அதிக மும்முரமாக இருப்பீர்கள் என்றும் அந்த ஆராய்ச்சி தெரிவித்துள்ளது.”
“நீங்கள் ஒரு குறிப்பிட்ட விதத்தில் உணர்வதற்கும் செயல்படுவதற்கும் உங்கள் நம்பிக்கைகள்தான் காரணம் என்பதால், நீங்கள் உங்கள் இலக்குகளை அடைய உதவுவதற்கான சக்தி உங்கள் நம்பிக்கைகளுக்கு இருக்கிறது. அதேபோல, நீங்கள் உங்கள் இலக்குகளை அடைவதிலிருந்து உங்களைத் தடுக்கும் சக்தியும் அதற்கு இருக்கிறது,”
“ஒருசில நொடிகளில் நான் ஒரு பதக்கத்தை இழந்தேன். வெற்றி பெற்றவருக்கும் எனக்கும் இடையே இருந்த வித்தியாசம் ஒரு சதவீதத்தில் பத்தில் ஒரு பங்கு மட்டும்தான். அந்த இடைவெளியை அடைப்பதற்கு ஒரே வழி முன்பைவிட மிகக் கடுமையாகப் பயிற்சி செய்வதுதான் என்று நான் நினைத்தேன்.
“அழுத்தத்திற்கு ஆளாகும்போது, பெரும்பாலான மக்கள், தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்வதையும் உடற்பயிற்சி செய்வதையும் முறையாகச் சாப்பிடுவதையும் நிறுத்திவிடுகின்றனர். அவர்கள் குறைவாகத் தூங்கி, மிக அதிக நேரம் வேலை செய்கின்றனர். ஆனால் அது ஒரு பெரிய தவறு. ஒன்று, தினமும் 10 — 12 மணிநேரம் வேலை செய்பவர்கள், இதய நோய் அல்லது மாரடைப்பால் தாக்கப்படுவதற்கு, 10 மணிநேரத்திற்கும் குறைவாக வேலை செய்பவர்களைவிட 56 சதவீதம் அதிக சாத்தியம் உள்ளது.
“மேல்மட்டத்தில் இருப்பவர்களுக்கும் சராசரியாக சாதிப்பவர்களுக்கும் இடையேயான வித்தியாசம் என்னவென்றால், மேல்மட்டத்தில் இருப்பவர்கள் தங்கள் வேலையும் தங்கள் ஓய்வும் சமநிலையில் இருக்கும்படி பார்த்துக் கொள்கின்றனர் என்பதை நான் அந்த ஆராய்ச்சியைப் படித்துத் தெரிந்து கொண்டேன். ஒரு குறிப்பிட்ட நேரம் ஒருமித்தக் கவனத்துடன் வேலை செய்வதும், பிறகு ஒரு குறிப்பிட்ட நேரம் ஓய்வெடுப்பதும் ஒரு சுழற்சி முறையில் வருமாறு அவர்கள் தங்கள் அட்டவணையை அமைத்துக் கொண்டனர்.”
“எந்தவொரு துறையிலும் சிறப்பாகச் செயல்படுபவர்கள், ஒரு சமயத்தில் 90 நிமிடங்கள் மட்டுமே ஒருமித்தக் கவனத்துடன் வேலை செய்கின்றனர்.
மதிய உணவிற்குப் பிறகு வெறும் 15 நிமிடங்கள் தூங்கி எழுந்திருப்பவர்கள், மாலைவரை மிகவும் புத்துணர்ச்சியோடு இருப்பதாக ஜப்பானில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.”
“நீங்கள் பெரும்பாலான மக்களைப் போன்றவர் என்றால், வேலைக்கு இடையே சிறிது நேரம் ஓய்வெடுப்பது குறித்து நீங்கள் குற்றவுணர்வு கொள்ளக்கூடும், உங்கள் நாளில் நீங்கள் மிகக் குறைவாகச் சாதித்திருப்பதாக நீங்கள் நினைக்கக்கூடும்
“ஓய்வு இடைவேளைகள் உங்கள் உடல் மறுசீரடைவதற்கு உதவுகின்றன. அவை நீங்கள் களைப்படையாமலும் சோர்ந்து போய்விடாமலும் நோயுறாமலும் பார்த்துக் கொள்கின்றன. அதாவது, நீங்கள் தினமும் மிகச் சிறப்பாகச் செயல்படுவதற்கு இந்த ஓய்வு இடைவேளைகள் உங்களுக்கு உதவுகின்றன.”
தனித்துவமானவர்களை, தனித்துவத்திலும் தனித்துவமானவர்களிடமிருந்து பிரிப்பது 1 சதவீதம் மட்டுமே என்பதை நான் கண்டுகொண்டது, பல்வேறு சாத்தியக்கூறுகள்
“நான் செயலற்ற நிலையில் இருந்தேன். ஆனால் ஒரு நடவடிக்கை எடுப்பதன் மூலம் என்னால் அந்தச் செயலின்மையை முறியடித்து, செயல்வேகத்தை உருவாக்கிக் கொண்டு, தொடர்ந்து இயக்கத்தில் இருக்க முடியும் என்பதை நீங்கள் எனக்குக் காட்டினீர்கள்.”
“என் இலக்கிற்கு என்னை இட்டுச் செல்லாத நடவடிக்கைகளில் நான் என் கவனத்தைக் குவித்துக் கொண்டிருப்பதாக நான் உணரும்போதெல்லாம், ‘நீங்கள் எந்தவொரு காரியத்தைச் செய்யவே கூடாதோ, அதைச் சிறப்பாகச் செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை’ என்ற
“விட்டுத்தள்ளுவதன் சக்தியைப் பற்றி நான் கற்றுக் கொண்டபோது, வாழ்க்கையில் முன்னேறிச் செல்வதற்கு, என்னைப் பற்றிய பழைய யோசனையை நான் விட்டுத்தள்ள வேண்டியது அவசியம் என்பதை நான் உணர்ந்தேன்.

