ஈரோடு மாவட்டம் மஞ்சக்காட்டு வலசை என்ற கிராமத்தில் 1908ல் செப்டெம்பர் 26 ஆம் நாள் பிறந்தார் தூரன். தூரன் என்பது கொங்கு கவுண்டர்களில் ஒரு துணைப்பிரிவு. தந்தை பழனியப்பக் கவுண்டர். தாய் பாவாத்தாள். மொடக்குறிச்சியில் ஆரம்பப்பள்ளிக்கல்வி பெற்றபின் ஈரோடு மாசன உயர்நிலைப்பள்ளியில் பள்ளியிறுதி முடித்தார். அப்போது ஆசிரியராக இருந்த திருமலைச்சாமி அய்யங்காரால் அவருக்கு தமிழார்வம் உருவானது.

![முன்சுவடுகள்: சில வாழ்க்கை வரலாறுகள் [Munsuvadugal: Sila Vaazhkkai Varalarugal]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1484065610l/33831785._SY475_.jpg)