முன்சுவடுகள்: சில வாழ்க்கை வரலாறுகள் [Munsuvadugal: Sila Vaazhkkai Varalarugal]
Rate it:
1%
Flag icon
முகங்கள் நினைவின் மணற்பரப்பில் அவர்கள் விட்டுச்சென்ற கால்தடங்கள் போன்றவை.
Hari Udayakumar
In memory of
5%
Flag icon
இரண்டாவது பெண் குழந்தைக்கு திலகவதி என்று பெயரிட்டார்கள். திரு.வி.க தன்னுள் ஒரு அன்னை இருப்பதை அக்குழந்தை வழியாகவே கண்டுகொண்டார். ஆணுக்குள் உள்ள பெண்மை மிக உன்னதமான ஒரு ஆன்மீகத்தளம் என்பதை திரு.வி.க பிற்பாடு பல இடங்களில் சொல்லியிருக்கிறார்.
Hari Udayakumar
Women in men
6%
Flag icon
செல்பவரை எண்ணி வாழ்பவர் இல்லை, எல்லாமே மறக்கலாகும் என்றார்கள்.
Hari Udayakumar
Life goes on
7%
Flag icon
இல்லறமல்லாது நல்லறமில்லை என்பதை அவரளவுக்கு உணர்ந்தவர் இல்லை. கணவனை இழந்த மனைவியும் மனைவியை இழந்த கணவனும் பொருத்தமான துணையைத் தேர்ந்தெடுத்து மணம் செய்தல்தான் முறை என்றார். மணம் செய்யாமல் வாழும் கைம்மை வாழ்க்கை ஆணுக்கானாலும் பெண்ணுக்கானாலும் வீணே. அதில் இன்பம் இல்லை. மனிதர்கள்
Hari Udayakumar
Widowers
13%
Flag icon
எளிமை, தனக்குள் மூழ்கி உழைக்கும் அர்ப்பணிப்பு ஆகியவை அடிப்படை விழுமியங்களாக இருந்த ஒரு காலகட்டத்தின் பிரதிநிதி பெரியசாமி தூரன்.
Hari Udayakumar
Lost souls
16%
Flag icon
வெட்டம் மாணி அடிப்படையில் மத பக்தி கொண்ட கிறித்தவர். பைபிளில் அவருக்கு ஆழமான ஈடுபாடும் படிப்பும் இருந்தது. இந்து புராணங்களை அவர் இந்திய நாட்டின் கலாசார அடித்தளமாகவே காண்கிறார், மதநூல்களாக அல்ல. ‘எந்த ஒரு பண்பாடும் அது உருவாக்கி எடுத்திருக்கும் புராண இதிகாசங்களின் மீது வேரூன்றியபடித்தான் வளர முடியும். இந்திய இலக்கியமும் அப்படித்தான். மகத்தான மகாபாரதம், ராமாயணம், புராணங்கள், ஸ்மிருதிகள் போன்றவை நம் பண்பாட்டை உருவாக்கும் சக்திகள்’ என்று தன் முன்னுரையில் வெட்டம் மாணி குறிப்பிடுகிறார்.
44%
Flag icon
வாழ்க்கை இனியது. போராடும்போது மேலும் இனிதாகிறது. ஏனெனில் எல்லா போராட்டங்களும் வாழ்க்கை மீதான ஆழமான விருப்பத்தில் இருந்து பிறப்பவை.
49%
Flag icon
நாம் நன்கறிந்த ஒரு பிரபலத்தைப்பற்றி எவ்வளவு அறிந்திருக்கிறோம் என்ற கேள்வி எப்போதுமே திகைக்க வைக்கக்கூடியது. அவர்களைப்பற்றி ஏராளமாக கேள்விப்பட்டிருப்போம். ஆனால் குறிப்பாக எத்தனையோ விஷயங்களை அறியாமலும் இருப்போம். பெரும்பாலும் நாம் அறிவது அந்த ஆளுமையை அல்ல, அந்த ஆளுமை மீது உருவாகியிருக்கும் ஒரு பிம்பத்தை.
Hari Udayakumar
Celebrities
57%
Flag icon
இந்திய மனதுக்கே உரிய துரதிருஷ்டவசமான சில போலி பாவனைகள் நம்மை உண்மையைப் பார்க்க விடாது செய்கின்றன. நாமே சமைத்து நம்பிக்கொள்ளும் பொய்களை விரும்பச் செய்கின்றன.
93%
Flag icon
ஜெயிலுக்குள் ராஜாஜி வெளியே உள்ள அரசியல் நிலைமைகளைப் பற்றி பேசுவதே இல்லை. ‘நமக்கு ஒன்றுமே தெரியாது. தெரியாமல் பேசுவது வீண் பதற்றத்தையே உருவாக்கும்’ என்கிறார்.