More on this book
Kindle Notes & Highlights
வெட்டம் மாணி அடிப்படையில் மத பக்தி கொண்ட கிறித்தவர். பைபிளில் அவருக்கு ஆழமான ஈடுபாடும் படிப்பும் இருந்தது. இந்து புராணங்களை அவர் இந்திய நாட்டின் கலாசார அடித்தளமாகவே காண்கிறார், மதநூல்களாக அல்ல. ‘எந்த ஒரு பண்பாடும் அது உருவாக்கி எடுத்திருக்கும் புராண இதிகாசங்களின் மீது வேரூன்றியபடித்தான் வளர முடியும். இந்திய இலக்கியமும் அப்படித்தான். மகத்தான மகாபாரதம், ராமாயணம், புராணங்கள், ஸ்மிருதிகள் போன்றவை நம் பண்பாட்டை உருவாக்கும் சக்திகள்’ என்று தன் முன்னுரையில் வெட்டம் மாணி குறிப்பிடுகிறார்.
வாழ்க்கை இனியது. போராடும்போது மேலும் இனிதாகிறது. ஏனெனில் எல்லா போராட்டங்களும் வாழ்க்கை மீதான ஆழமான விருப்பத்தில் இருந்து பிறப்பவை.
நாம் நன்கறிந்த ஒரு பிரபலத்தைப்பற்றி எவ்வளவு அறிந்திருக்கிறோம் என்ற கேள்வி எப்போதுமே திகைக்க வைக்கக்கூடியது. அவர்களைப்பற்றி ஏராளமாக கேள்விப்பட்டிருப்போம். ஆனால் குறிப்பாக எத்தனையோ விஷயங்களை அறியாமலும் இருப்போம். பெரும்பாலும் நாம் அறிவது அந்த ஆளுமையை அல்ல, அந்த ஆளுமை மீது உருவாகியிருக்கும் ஒரு பிம்பத்தை.
இந்திய மனதுக்கே உரிய துரதிருஷ்டவசமான சில போலி பாவனைகள் நம்மை உண்மையைப் பார்க்க விடாது செய்கின்றன. நாமே சமைத்து நம்பிக்கொள்ளும் பொய்களை விரும்பச் செய்கின்றன.
ஜெயிலுக்குள் ராஜாஜி வெளியே உள்ள அரசியல் நிலைமைகளைப் பற்றி பேசுவதே இல்லை. ‘நமக்கு ஒன்றுமே தெரியாது. தெரியாமல் பேசுவது வீண் பதற்றத்தையே உருவாக்கும்’ என்கிறார்.

![முன்சுவடுகள்: சில வாழ்க்கை வரலாறுகள் [Munsuvadugal: Sila Vaazhkkai Varalarugal]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1484065610l/33831785._SY475_.jpg)