எனக்கு கடவுளிடத்திலும் அவனுடைய கருணையிலும் அசைக்க முடியாத நம்பிக்கை இருப்பதுடன் சத்தியம், அன்பு இவைகளிடத்தில் தணியாத ஆர்வம் உண்டு என்பதையும் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் ஒவ்வொருவரிடத்திலும் மறைந்திருப்பது அவைதான் அல்லவா? அவர் தொடர்ந்தார்: நாம் கண்ணால் காணும் இவ்வுலகில் புதியவற்றைக் கண்டு பிடிக்கலாம், உண்டு பண்ணலாம் என்றால் ஆன்மீக விஷயங்களில் திவாலாகி விட்டோம் என பறை சாற்ற வேண்டுமா என்ன? விதி விலக்குகளை அதிகமாக்கி அவற்றை விதியாக ஆக்கிவிடுவது அசாத்தியமானதா, என்ன? மனிதன், மனிதனாகத்தான் இருக்க வேண்டுமென்றால், அவன் எப்பொழுதும் முதலில் மிருகமாக இருந்து பின்னால்தான் மனிதனாக ஆக வேண்டுமா?17