பிச்சைக்காரன் செல்வத்தைத் துறக்க முடியாது. ஒரு மனிதன், என் வியாபாரம் நசிந்து விட்டது; என் மனைவி என்னை விட்டுப் போய்விட்டாள்; நான் எல்லாவற்றையும் துறந்து விட்டு ஓர் ஆசிரமத்தில் சேரப் போகிறேன், என்று புலம்பினால் அவன் எந்த தியாகத்தைச் செய்ததாகக் குறிப்பிடுகிறான்? பணத்தையோ அன்பையோ அவன் துறக்கவில்லை. அவை இவனைத் துறந்து விட்டன! என்பார் குருதேவர்.