நான் சிரித்து மறுபடியும் என் வேண்டுகோளைத் திரும்பக் கூறினேன். தந்தையே, சொல்வதற்கு ஒன்றுமில்லை. அவர் தன் அழகான கைகளை இல்லை என்ற முறையில் விரித்தவாறு சைகை செய்தார். என் உணர்வு என்றுமே இந்த நிரந்தரமல்லாத உடலுடன் ஒன்றியதில்லை. நான்2 இவ்வுலகிற்கு வருமுன்பே, தந்தையே நான் அதுவாகவே இருந்தேன். சிறு பெண்ணாக இருந்தபோதும், நான் அதுவாகவே இருந்தேன். நான் வயதான பெண்ணாக வளர்ந்தேன். அப்பொழுதும் நான் அதுவாகவே இருந்தேன். நான் எந்தக் குடும்பத்தில் பிறந்தேனோ அவர்கள் இந்த உடலுக்கு மணமுடிக்க ஏற்பாடுகள் செய்த பொழுதும் நான் அதுவாகவே இருந்தேன். மேலும் தந்தையே, தங்கள் முன்னால் இப்பொழுதும் நான் அதுவாகவே இருக்கிறேன். இனி
...more