"ஒன்றைப் பற்றி அதிகமான வார்த்தைகளால் தெரிந்து கொண்டிருப்பதும் அதைப் புரிந்து கொண்டிருப்பதும் வெவ் வேறானவை. அவற்றைக் குழப்பிக் கொள்ளக் கூடாது," என்று அவர் குறிப்பிட்டார். "ஒவ்வொரு பத்தியையும் ஒரு நேரத்தில் உணர்ந்து கற்றால்தான், புனிதமான நூல்கள் ஆத்ம ஞானத்தை அறியும் ஆர்வத்தை தூண்டுவிக்க உதவுகின்றன. இல்லை யென்றால்தொடர்ந்த அறிவு பூர்வமான படிப்பானது அகந்தை, பொய்யான திருப்தி மற்றும் அரை வேக்காட்டு அறிவு ஆகியவை களைத்தான் உண்டாக்கும்."